முதல்வர் பிறந்தநாள்.. இட்லி முதல் சிக்கன் குழம்பு வரை பொதுமக்களுக்கு தடபுடலான விருந்து..

x

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வடக்கு ஒன்றியம் சார்பாக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டசமுத்திரம் ஊராட்சி "காந்திநகர்" பகுதியில் குடியாத்தம் வடக்கு ஒன்றிய செயலாளரும் குடியாத்தம் ஒன்றிய குழு பெருந்தலைவருமான சத்யானந்தம் தலைமையில், முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகளும் வழங்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, பொதுமக்களுக்கு உணவாக இட்லி, சேமியா, கேசரி உள்ளிட்டவையுடன் தடபுடலான சிக்கன் குழம்பு உள்ளிட்ட அசைவ உணவுகளும் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டன. கொண்ட சமுத்திரம் ஊராட்சியில் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டு இருந்த புதிய திமுக கொடிகளை ஏற்றி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இதில் வடக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஜெயபிரகாஷ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜ்கமல் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்