முதல்வர் பிறந்தநாள் - குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழா தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் பல்லாவரம் தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதி ஏற்பாட்டில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தங்க மோதிரங்களை அணிவித்தார். மேலும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பரிசு பெட்டகத்தை அவர் வழங்கினார். பல்லாவரம் தொகுதி முழுவதும் திமுக கொடி ஏற்றி வைக்கப்பட்டு தமிழ்மொழி காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. மேலும், பொழிச்சலூர் சாய்பாபா ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கும், திரிசூலம் பகுதி மக்களுக்கும் அறுசுவை உணவை திமுக எம்.எல்.ஏ கருணாநிதி வழங்கினார்.
Next Story