"கூச்சமே இல்லாம.. குற்ற உணர்ச்சியே இல்லாம கலந்துக்குறாரு.." - முதல்வர்
அரசியல் ரீதியாக அச்சுறுத்தல் வரும்போதெல்லாம் இஸ்லாமியர்களை காக்கும் அரசாக திமுக அரசு திகழ்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, இஸ்லாமியர்களுடன் நோன்பு திறந்தார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆபத்துக் காலத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக செயல்பட்டுவிட்டு, தற்போது எவ்வித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் சிலர் இஃப்தார் நிகழ்வில் கலந்துகொள்வதாக குற்றம்சாட்டினார்.
Next Story