தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தமிழிசைக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதிலடி | CM STALIN
பா.ஜ.க. நிர்வாகி தமிழிசை செளந்தரராஜனின் மும்மொழி வாழ்த்தில் இந்தி இடம்பெறவில்லை என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் தெலுங்கு மொழியைப் பள்ளிப் பருவத்திலேயே படித்து தெரிந்துகொள்ளவில்லை.... தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் பணியாற்றியதால், பழக்கத்தின் மூலமாக அறிந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். இதிலிருந்தே, மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும், தேவைப்படுகிறவர்கள் அதனைப் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்கிற திராவிட இயக்கத்தின் கொள்கை வழியிலான தமிழ்நாட்டின் உணர்வையும், தனக்கான பிறந்தநாள் வாழ்த்துப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள தமிழிசைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
Next Story