கிறிஸ்துமஸ் பண்டிகை - தலைவர்கள் வாழ்த்து
முதலமைச்சர் ஸ்டாலின் விடுத்துள்ள செய்திகுறிப்பில், அன்பின் பாதையை நெறிதவறாமல் பின்பற்றும் கிறித்தவர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். சம உரிமையோடும் - சமத்துவ மனப்பான்மையுடனும் வாழும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ தமிழக அரசு தொடர்ந்து பாடுபடும் என உறுதி அளித்துள்ளார்.
உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் நிலவ வேண்டும் எனவும், ஏழைகளின் துயரங்கள் நீங்கி உலகம் வளம் பெற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்தியுள்ளார்.
அன்பையும் பரிவையும் கனிவையும் நேசத்தோடு சக மனிதர்களிடம் பிரதிபலிக்கும் உணர்வுடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகமே அமைதி, கருணை, ஒற்றுமை, சகோதரத்துவம், நல்லிணக்கத்தால் நிறையட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Next Story