"குழந்தைகள் அணியா?.. என்னங்க விஜய்" தமிழிசை அட்வைஸ்
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், வொர்க் ப்ரம் ஹோமில் இருந்து வொர்க் ப்ரம் ஃபில்டுக்கு வந்திருப்பது மகிழ்ச்சி என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், சம்பிரதாயத்திற்காக விஜய் பாஜகவை எதிர்க்காமல் முழு எதிர்ப்பையும் திமுக கூட்டணியிடம் காட்ட வேண்டும் என்று தெரிவித்தார். மேலும் தவெகவில் குழந்தைகள் அணி என்பதை தவிர்க்க வேண்டும் என்றும், குழந்தைகள் விஜய் பின்னால் சென்று படிப்பை நிறுத்தி விட கூடாது என்றும் கோரிக்கை விடுத்தார்.
Next Story
