#BREAKING || பிப்.8,9,10 - தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு 2024 - முதல்வர் அதிரடி அறிவிப்பு

x

தமிழ் கணினி பன்னாட்டு மாநாடு 2024 பிப்ரவரி மாதம் நடைபெறும் - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு. 2024 பிப். 8, 9 மற்றும் 10 தேதிகளில் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற உள்ளது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேச அளவில் தமிழுக்காக பங்களித்து வரும் அறிஞர்கள், வல்லுநர்கள், தமிழ் ஆர்வலர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். புது யுகத்திற்கு ஏற்றார் போல் தமிழ் மொழியும் புத்துயிர் பெற்று வளர வேண்டும் என்பதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது - முதலமைச்சர் ஸ்டாலின். "இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் மொழிக்காக முன்னெடுக்காத ஒரு திட்டத்தை முன்னோடியாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது"


Next Story

மேலும் செய்திகள்