``ரூ. 25 கோடி இழப்பீடு..'' - Dy.CM உதயநிதிக்கு எதிரான வழக்கு... கோர்ட் அதிரடி உத்தரவு

x
  • துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஒரு திரைப்படம் தொடர்பாக, 25 கோடி ரூபாய் இழப்பீடு கோரி ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் காலதாமதமாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், தெளிவில்லாத மனு என்றும், மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படடது. வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காரமன், ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்