"சின்னத்தை நீக்க வேண்டும்" - பகிரங்க எச்சரிக்கையுடன் விஜய்க்கு வந்த பெரிய சிக்கல்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன், யானை சின்னத்தை தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தேர்தல் விதிகளின்படி கடந்த 2004 ஆம் ஆண்டு எந்த ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளும், அங்கீகரிக்கப்படாத கட்சிகளும், கொடியில் யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என உத்தரவு உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் கட்சி தலைமையின் உத்தரவின் பேரில் கொடியில் யானை சின்னத்தை நீக்கக்கோரி தமிழக வெற்றி கழகத்தின் மேனேஜர் வெங்கட் என்பவருக்கு அனுப்பி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சட்ட நகலுக்கு உரிய பரிசீலனை செய்வதாக விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆனந்தன் கூறியுள்ளார்.
Next Story