#Breaking|| ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கு.. சற்று நேரத்தில் தீர்ப்பு
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தலை எதிர்த்து, ஓபிஎஸ் உள்ளிட்ட 4 பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு
இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பளிக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்
ஜூலை 11, 2022ல் நிறைவேற்றப்பட்ட அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரிய மனுக்கள், மார்ச் 28ல் நிராகரிப்பு
2,460 பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும், செல்லுபடியாகக் கூடியவையே என தீர்ப்பில் குறிப்பிட்ட நீதிபதி கே.குமரேஷ்பாபு
ஓபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானத்தை பொறுத்தவரை, பிரதான வழக்கில் தான் தீர்மானிக்க முடியும் எனவும் தீர்ப்பு
தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உள்ளிட்டோர் மேல்முறையீடு - ஈபிஎஸ் கேவியட் மனு தாக்கல்
நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது அமர்வு முன் மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை
ஏப்., 21ல் தொடங்கிய விசாரணை - ஏப்., 24, ஜூன் 9, ஜூன் 12, ஜூன் 15 ஜூன் ஆகிய தேதிகளில் அனைத்து தரப்பு வாதங்கள் முன்வைப்பு
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஜுன் 28ல் எழுத்துப்பூர்வ வாதங்கள் தாக்கல்
மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக்
அதிமுகவின் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் எதிர்த்தும், பொதுச் செயலாளர் தேர்தல் நடைமுறையை எதிர்த்தும் ஒபிஎஸ் மற்றும் அவரது அணியினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 25) தீர்ப்பளிக்கிறது
கடந்த ஆண்டு ஜூலை 11ல் நடத்தப்பட்ட அதிமுக பொது குழு நிறைவேற்றப்பட்ட நீக்க தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரி ஒ.பி.எஸ்., மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்து மார்ச் 28ஆம் தேதி நீதிபதி கே.குமரேஷ்பாபு உத்தரவிட்டிருந்தார்.
அவரது தீர்ப்பில், பொது குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால், 2,460 பொது குழு உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என தெளிவுபடுத்தி இருந்தார்.
அதன்படி பொது செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானமும், இடைக்கால பொது செயலாளராக பழனிசாமியை நியமித்த தீர்மானங்களும் செல்லும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
உறுப்பினர் நீக்கத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்கிற விதி மீறப்பட்டுள்ளதால், ஒபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானத்தை பொறுத்தவரை பிரதான வழக்கில் தான் தீர்மானிக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் உள்ளிட்டோர் உடனடியாக மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீடு மனுக்களில் தனது தரப்பு விளக்கத்தை கேட்காமல் எவ்வித இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க கூடாது என அதிமுக மற்றும் அதன் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் விசாரித்தனர். ஏப்ரல் 20ல் தொடங்கிய முதல் நாள் விசாரணை, ஏப்ரல் 21, ஏப்ரல் 24, ஜூன் 9, ஜூன் 12, ஜூன் 15 அனைத்து தரப்பு வாதங்களும் முன்வைக்கபட்டன.