#BREAKING || அமைச்சர்கள் வழக்கு..லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ்
சொத்துக்குவிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து எடுத்த வழக்கு
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், லஞ்ச ஒழிப்புத் துறை செப்டம்பர் 20ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவு
வழக்கு விசாரணையின் போது பின்பற்றப்பட்ட நடைமுறைகள் தவறானவை - உயர்நீதிமன்றம்
வழக்கில் இருந்து விடுவிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்த புலன் விசாரணை அதிகாரி, பின்னர் மேல் விசாரணைக்கு அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்திருக்கிறார் - உயர் நீதிமன்றம்
அமைச்சர்கள் இருவரையும் விடுவித்த உத்தரவுகளும் ஒரே மாதிரியாக உள்ளன - உயர் நீதிமன்றம்
நீதிமன்றத்தின் மனசாட்சியை உலுக்கியதால் தாமாக முன் வந்து வழக்கு விசாரணை - உயர் நீதிமன்றம்
நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டிருக்க முடியாது - உயர் நீதிமன்றம்
விசாரணை அதிகாரியின் விசாரணை முறையில் தவறு எதுவும் இல்லை - அரசு தலைமை வழக்கறிஞர்
லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் களங்கப்படுத்தப்படுவர் - அரசு தலைமை வழக்கறிஞர்
ரூ.76.40 லட்சம் சொத்து சேர்த்த வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு, அவரது மனைவியை விடுவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவு
ரூ.44.56 லட்சம் சொத்து குவித்ததாக அமைச்சர் ராமச்சந்திரன், அவரது மனைவி உள்பட மூவரை விடுவித்தது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம்
விடுவிப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு துறை மேல் முறையீடு செய்யாததால் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி