மிஸ்ஸான டாஸ்க்... டென்ஷனில் டெல்லி... என்ட்ரி ஆகும் அண்ணாமலை... காத்திருக்கும் அதிரடி மாற்றம்
தமிழகத்தில் பா.ஜ.கவில் அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும், 2026 தேர்தலுக்கு தயாராவது குறித்தும் உயர்மட்டக் குழுவில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது மேற்படிப்பை முடித்துவிட்டு வரும் 28-ம் தேதி சென்னை திரும்ப உள்ள நிலையில், கமலாலயத்தில் நவம்பர் 11ம் தேதி தமிழக பா.ஜ.க உயர்மட்டக் குழுக் கூட்டம் கூடவுள்ளது.
பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது மேற்படிப்பை முடித்துவிட்டு வரும் 28-ம் தேதி சென்னை திரும்ப உள்ள நிலையில், கமலாலயத்தில் நவம்பர் 11ம் தேதி தமிழக பா.ஜ.க உயர்மட்டக் குழுக் கூட்டம் கூடவுள்ளது.
பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர்மட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
தமிழகத்தில் பா.ஜ.கவில் அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது குறித்தும் , 2026 தேர்தலுக்கு தயாராவது குறித்தும் உயர்மட்டக் குழுவில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பா.ஜ.கவில் புதிய உறுப்பினர் சேர்ப்பு, பழைய உறுப்பினர்கள் புதுப்பிப்பு பணிகள் மூலம் 1 கோடி உறுப்பினர்களை சேர்க்க தேசியத் தலைமையால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆனால் உறுப்பினர் சேர்க்கை காலம் இம்மாதம் 15-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை 10 லட்சம் பேர் மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளதால், தேசிய தலைமை கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து எச்.ராஜாவை டெல்லிக்கு நேரில் வரவழைத்து விளக்கம் கேட்டுள்ளததோடு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 10ல் ஒரு பங்கையே நிறைவேற்றியுள்ள நிலையில், அதுகுறித்து ஆலோசிக்கவே உயர்மட்டக் குழு அவசரமாக கூடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.