வாக்காளர் பட்டியலில் தில்லுமுல்லு - அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு
தேர்தலுக்கு முன்பாகவே டெல்லியில் பாஜக தோல்வியை ஏற்றுக் கொண்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனது புதுடெல்லி சட்டமன்றத் தொகுதியில், பாஜகவின் ஆபரேஷன் தாமரையை டிசம்பர் 15 முதல் நடந்து வருவதாக குற்றம் சாட்டினார். 15 நாட்களில் ஐந்தாயிரம் வாக்காளர்களை நீக்கவும், 7 ஆயிரத்து 500 வாக்காளர்களை சேர்க்கவும் விண்ணப்பித்துள்ளதாக கூறினார். மொத்த வாக்காளர்களில் 12 விழுக்காட்டை முறைகேடு செய்ய முடியும் என்றால், எதற்கு தேர்தல் நடத்த வேண்டும்? என்று கெள்வி எழுப்பியுள்ளார். தேர்தல் என்ற பெயரில் ஒருவித 'விளையாட்டு' நடப்பதாகவும், டெல்லியில் பாஜக தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
Next Story