பாஜக பிரமுகர் கொலை வழக்கு..! நீதிமன்றத்தில் சரண்டரான 2 பேர்.. பரபரப்பு பின்னணி!

x

வேலூர் மாவட்ட பாஜக ஆன்மீகப் பிரிவு மாவட்ட நிர்வாகி விட்டல் குமார். இவர், கடந்த 16 ஆம் தேதி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் பாலாசேட்டுக்கு தொடர்பு இருப்பதாகவும் பாஜக சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. அதே நேரத்தில், சந்தேக மரணம் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், விட்டல் குமாரை கொலை செய்த‌தாக, காட்பாடி நீதிமன்றத்தில் பாலா சேட் மகனின் ஓட்டுநர் சந்தோஷ் மற்றும் சந்தோஷின் நண்பர் கமலதாசன் ஆகியோர் சரணடைந்துள்ளனர். அவர்களை ஜனவரி 2ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, கொலை வழக்காக மாற்றம் செய்துள்ள போலீசார், 2 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். மேலும், பாலா சேட் என்பவரையும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்


Next Story

மேலும் செய்திகள்