ஆ.ராசாவிற்கு எதிரான வழக்கு - ஷாக் கொடுத்த ED
ஆ..ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், விசாரணயை துவங்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுகவைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, வருமானத்துக்கு அதிகமாக 5 கோடியே 53 லட்ச ரூபாய் அளவுக்கு சொத்துக்களை குவித்துள்ளதாக குற்றம்சாட்டி, 2015இல் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அந்த வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறை, ஆ.ராசா மற்றும்
மூவர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. அமலாக்கத்துறை கூடுதல் குற்றபத்திரிகை தாக்கல் செய்யும் வரை குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் தொடங்க கூடாது என கிருஷ்ணமூர்த்தி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிகை நகல்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதால் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யும் வரை விசாரணையை தள்ளிவைக்க வேண்டிய அவசியமில்லை எனத் அமலாக்கத்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. விசாரணையை தாமதப்படுத்தும் நோக்கில் தாக்கல்
செய்யப்பட்டுள்ள இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.