``இங்கே நாங்கள் தோற்றாலும்..’’ - பரபரப்பை கிளப்பிய ஆ.ராசா
வக்பு சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அதனை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என திமுக எம்.பி ஆ.ராசா தெரிவித்துள்ளார். வக்பு சட்ட திருத்த மசோதா வரைவு அறிக்கைக்கு, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஒப்புதல் அளித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி ஆ.ராசா, நாடாளுமன்றத்தில் தங்களது செயல்பாடுகள் தோற்றாலும், உச்சநீதிமன்றம் மூலம் நடவடிக்கைகள் தொடரும் என உறுதி அளித்துள்ளார். வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது, இந்த வரைவு அறிக்கை மீதான எதிர் கருத்துக்கள் சமர்பிக்கப்படும் எனவும் ஆ.ராசா தெரிவித்தார்.
Next Story