அண்ணாமலை பரபரப்பு ட்வீட்

x

சென்னை அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் வரை நடந்த சம்பவங்களை, சிறப்பு புலனாய்வுக் குழு மீண்டும் விசாரிக்க வேண்டும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், சென்னை காவல் ஆணையர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் தெரிவித்த முரண்பட்ட கருத்துகளை ஆய்வுசெய்ய வேண்டும் என்றும், குற்றத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து நீதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்