``வழக்கைத் திசைதிருப்ப முயற்சி''..அண்ணாமலை ஆவேசம் | Annamalai | BJP
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில், திமுக அரசு மேலும் மேலும் தவறுகளை இழைத்துக் கொண்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் இட்டுள்ள பதிவில், போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக இளைஞர் அணியினரை கைது செய்து, நேர்மையான விசாரணை கோரும் குரல்களை ஒடுக்குவது, அப்பட்டமான ஜனநாயக மீறல் ஆகும் என தெரிவித்துள்ளார். வழக்கைத் திசைதிருப்பும் முயற்சியில் ஆரம்பக் கட்டத்திலிருந்தே திமுக அரசு ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.
Next Story