அண்ணாமலை போட்ட பரபரப்பு ட்வீட் | ANNAMALAI | BJP | TWEET
தமிழகம் முழுவதும் உள்ள 385 மாவட்ட கல்வி அலுவலகங்களில் இணையதள இணைப்புக்கான கட்டணம், பல மாதங்களாகச் செலுத்தப்படாததால், இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிய வருவதாக, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கான இணைய தள இணைப்புக் கட்டணம் கூடச் செலுத்த முடியாமல், அன்றாடச் செலவுகளுக்கே கடன் வாங்கும் நிலையில் இருக்கிறதென்றால், உண்மையில், திமுக அரசு, தமிழக அரசின் நேரடி வரி வருமானத்தையும், ஜிஎஸ்டியில் தமிழகத்தின் பங்காகக் கிடைக்கும் சுமார் 70 சதவீத நிதியையும் எந்த வகையில் செலவு செய்கிறது என்ற கேள்வி எழுவதாகவும், இந்த நிதி எல்லாம் எங்கே செல்கிறது? என்றும், அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story