மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியா? - அண்ணாமலை சிக்னல்
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி, லண்டன் பயணத்தை தொடர்ந்து அதிமுகவை ஆக்ரோஷமாக விமர்சிப்பதை அண்ணாமலை தவிர்த்து வருகிறார். அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் அதிமுக போராட்டத்தை அவர் வரவேற்றதும் தனிக்கவனம் பெற்றது. இந்த சூழலில் ஆங்கில ஊடக நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலையிடம், பாஜக உடன் கூட்டணி இல்லை என்று அதிமுக உறுதியாக சொல்லும் வேளையில், சமீபகாலமாக அதிமுகவுக்கு எதிரான அண்ணாமலை மற்றும் பாஜக தலைவர்கள் பேச்சில் மாற்றம் தெரிகிறதே? என வாசகர் கேள்வியை எழுப்பினார். அதற்கு தங்கள் பேச்சு மாறவில்லை என்று குறிப்பிட்ட அண்ணாமலை, பாஜக வளர வேண்டும், அரசியல் மாறும் சூழலில் அதற்கு ஏற்ற வகையில் நாங்களும் எங்களை தகவமைக்க வேண்டிய தேவை உள்ளது, கட்சி வளர்வதற்கான நடவடிக்கையை எடுப்போம் என கூறியிருந்தார். அதேவேளையில் கூட்டணி குறித்த கேள்விக்கு கட்சி தலைமையே முடிவு செய்ய வேண்டும் என்ற அண்ணாமலை தனக்கு அதிமுகவுடன் தனிப்பட்ட பிரச்சினை எதுவும் கிடையாது. நான் ஏன் அதிமுகவுடன் தனிப்பட்ட பிரச்சினையை கொண்டிருக்க வேண்டும்? என்ற பதில் கேள்வியையும் எழுப்பிய அண்ணாமலை, 2026-ல் தமிழகத்தில் பாஜக இடம்பெறும் கூட்டணி ஆட்சி அமையும் என்றார்.