"இது பெரும் துரோகம்.." - பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் அரசுப் பணி காலியிடங்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 50 ஆயிரமாக அதிகரித்திருப்பது திமுக ஆட்சியின் தோல்விக்கு எடுத்துக்காட்டு என பாமக. தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையை சுட்டிக்காட்டி, கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் வெறும் 34 ஆயிரத்து 384 பேருக்கு மட்டும்தான் அரசு வேலைகள் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது இளைய தலைமுறையினருக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம் என்றும், உடனடியாக காலியாக உள்ள அரசு பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
Next Story