"இதுவரை எந்த அரசியல் கட்சியும் இந்த மாநாடு நடத்தியதில்லை" இதுவே முதல் முறை - அன்புமணி ராமதாஸ்

x

திருவண்ணாமலையில் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் சார்பில் உழவர் மாநாடு சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை பாமக நிறுவனர் ராமதாஸ் தொடங்கி வைக்க உள்ளார். விவசாயம் சார்ந்த பிரச்சனைகள கண்டறிந்து அதற்கு தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இதுவரை எந்த அரசியல் கட்சியும் உழவர்களுக்கென தனியாக மாநாடு நடத்தியதில்லை என்று கூறினார்.

உழவர்கள் முன்னேற்றம் பெற வேண்டும் என்றும், விளைச்சலுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். வெள்ள நிவாரணம் வழங்குவதில், வட தமிழக மக்கள் மீது முதலமைச்சர் பராபட்சம் காட்டுகிறார் என்றும் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டினார்.


Next Story

மேலும் செய்திகள்