"தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை.." - கொந்தளித்த அன்புமணி

x

தமிழகத்தில், கொலை நடக்காத நாள்களே இல்லை என்ற அளவுக்கு சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், காரைக்குடியில் கஞ்சா வியாபாரி ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக அரசின் செயல்பாடுகள் மோசமாக சீரழிந்து வருவதையே தினசரி கொலைகள் காட்டுவதாக குறிப்பிட்டுள்ள அவர், இனியாவது சட்டம் -ஒழுங்கை காக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்