"60,567 பேருக்கு அரசு வேலையா? வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள்!"

x

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 60 ஆயிரத்து 567 அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் ஐயத்தை ஏற்படுத்துவதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சரின் புள்ளிவிவரங்களின்படி, கடந்த 3 ஆண்டுகளில் 24 ஆயிரத்து 879 பேருக்கு மட்டுமே அரசு வேலை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மூன்றரை லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், 2 லட்சம் புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும், திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தாகவும், ஆனால், இந்த 3 ஆண்டு ஆட்சியில், வெறும் 10 சதவீதம் பேருக்கு கூட வேலை வழங்கப்பட வில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, திமுக ஆட்சியில், எத்தனை பேருக்கு வேலை வழங்கப்பட்டது என்பது குறித்து, வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்