திடீரென தாக்கி பேசிய அமித்ஷா..! உடனே பதிலடி கொடுத்த சித்தராமையா | Amit Shah

x

தொகுதி மறுவரையறை குறித்த அமித்ஷா பேச்சு - சித்தராமையா கண்டனம்

தொகுதி மறுவரையறை குறித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தென்மாநிலங்களுக்கு அநீதி ஏற்படாது என்று அமித் ஷா கூறியுள்ளது திசைதிருப்பும் செயல் என்று கூறிய அவர், மத்திய அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் தென் மாநிலங்களை தண்டிக்கும் நோக்கத்துடன் உள்ளது என்பது தெளிவாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், அநீதிக்கு எதிராக மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தென் மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்