``அப்போ தாத்தா இப்போ..'' ``அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா..?'' - மீண்டும் சீமான் சர்ச்சை பேச்சு
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியினர் போலீசாரின் தடுப்புகளை மீறி தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிர்ப்பு தெரிவித்து தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர். அப்போது, போலீசாரின் தடுப்புகளை மீறி தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை நாம் தமிழர் கட்சியினர் தாக்க முற்பட்ட நிலையில், கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் நாம் தமிழர் கட்சியினரை அங்கிருந்து போலீசார் கலையச் செய்தனர்.
Next Story