எல்லா கட்சிகளுக்கும் பறந்த கடிதம்.. தலைமை செயலகத்தில் நடக்கப் போவது என்ன?
தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். தலைமை செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசியல் கட்சிகளின் கருத்துக்களையும், குறைகளையும் கேட்டறிய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
Next Story