ஜானகி நூற்றாண்டு விழா - திரைக் கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்த ஈபிஎஸ்
சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாஜலபதி பேலஸில், அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜானகி நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச் செயலாளர் பழனிச்சாமிக்கு சாலை நெடுகிலும் தொண்டர்கள் கொடியசைத்து, மலர்கள் தூவி, ஒயிலாட்டம், கரகாட்டத்துடன் வரவேற்பு அளித்தனர்.
விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிச்சாமி, முதலில் எம்ஜிஆர் -ஜானகி ஆகியோரின் அரிய புகைப்படங்கள் இடம்பெற்ற புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர், எம்ஜிஆர், ஜானகி, ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், தொடர்ந்து ஜானகியின் உருவப்படத்தை திறந்து வைத்து, நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டார். ஜானகியுடன் திரைத்துறையில் பயணித்த ராஜஸ்ரீ, வெண்ணிற ஆடை நிர்மலா, சச்சு ஜெயசித்ரா, குட்டி பத்மினி ஆகியவரை கௌரவித்து நினைவு பரிசு வழங்கினார்.