அதிமுக உறுப்பினர்கள் திடீர் வெளிநடப்பு... கூட்டத்தில் பரபரப்பு
ஈரோடு மாநகராட்சி கூட்டத்தின் போது மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்எல்ஏமான ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படாதது குறித்து, அக்கட்சி கவுன்சிலர் சபுராமா ஜாபர்சாதிக் கேள்வி எழுப்பினார். கூட்டத்தில், மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படாதது குறித்து, காங்கிரஸ் கவுன்சிலர் சபுராமா ஜாபர்சாதிக் கேள்வி எழுப்பினார். இதை கண்டித்து வெளிநடப்பும் செய்வதாக அவர் அறிவித்த நிலையில், உடனடியாக இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து, அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Next Story