BREAKING || ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - முடிவை அறிவித்தது அதிமுக
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், புறக்கணிப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது
இடைத்தேர்தல் - அதிமுக புறக்கணிப்பு? - எகிறும் எதிர்பார்ப்பு/ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்க முடிவு என தகவல்/சற்று நேரத்தில் தொடங்கவுள்ள அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், புறக்கணிப்பு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது/ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு புறக்கணிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட அதிமுக திட்டம்/தேர்தலை புறக்கணிக்கும் பட்சத்தில், கூட்டணி கட்சியான தேமுதிகவுக்கு ஆதரவு அளித்து அக்கட்சி வேட்பாளரை களமிறக்க வாய்ப்பு/திமுக வேட்பாளரான சந்திரகுமார், விஜயகாந்தின் ரசிகர் மன்றத்தில் இருந்து அவர் மூலம் தேமுதிக சார்பில் எம்.எல்.ஏ. ஆக்கப்பட்டவர் /சந்திரகுமாரை எதிர்த்து களம் காண விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் சரியான சாய்ஸ் என அதிமுக நினைப்பதாக தகவல்/கோப்புக்காட்சி.
இடைத்தேர்தல் - அதிமுக புறக்கணிப்பு? - எகிறும் எதிர்பார்ப்பு/ஏற்கனவே விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த போது, யாருக்கும் ஆதரவு இல்லை என்ற நிலைப்பாட்டை அதிமுக எடுத்தது குறிப்பிடத்தக்கது/முன்னதாக நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆளுங்கட்சி முறைகேடு செய்ததாக கூறி விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்தது/தற்போது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்க அதிமுக என்ன காரணம் சொல்லப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது/இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ள நிலையில், போட்டி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை/இன்னொருபக்கம் போட்டியில் உறுதியாக இருக்கும் நாம் தமிழர் கட்சி, இதுவரை வேட்பாளரை அறிவிக்கவில்லை.