"எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு" - அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்

x

"எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு" - அமைச்சர் ரகுபதி கடும் விமர்சனம்

குரலை உயர்த்தி கைகளை சுழற்றி பேசினால், திமுகவை வீழ்த்திவிடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு கண்டு கொண்டிருப்பாதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆட்சிக்காகவும் அதிகாரத்திற்காகவும் சசிகலா தொடங்கி, ஓபிஎஸ் வரை ஒவ்வொருவராக காலை வாரிவிட்ட நீண்ட வரலாறு உங்களுடையது எனவும், ஆட்சிக்காக பாஜகவிடம் அண்டிப் பிழைத்து மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு, இப்பொழுதும் கூட பாஜகவை வலிக்காமல் வலியுறுத்திவிட்டு,’ மேடையில் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டி உள்ளார். மேலும், குரலை உயர்த்தி கைகளை சுழற்றி பேசினால், திமுகவை வீழ்த்திவிடலாம் என்று எடப்பாடி பழனிச்சாமி பகல் கனவு கண்டு கொண்டிருப்பாதாகவும் அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்