இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (05-08-2023) | 9PM Headlines

x

"தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல"

இந்தி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும் என்ற அமித்ஷாவின் பேச்சுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கடும் கண்டனம்...

தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல எனவும் ஆவேசம்...

பாஜகவுக்கு இது வாழ்வா சாவா தேர்தல் என்பதால், மீண்டும் ஆட்சியை பிடிக்க எதையும் செய்வார்கள் என, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று எச்சரித்துள்ளார். இதனிடையே, கலைஞர் உரிமைத்தொகைக்கான இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவு முகாம் இன்று தொடங்கியது. இதுகுறித்து இன்று விண்ணப்ப பதிவு செய்த பெண்களிடம் பேசினோம்... தகவல்களை விவரிக்கிறார்கள் செய்தியாளர்கள் சதீஷ்முருகன், ரமேஷ் மற்றும் பிரதீப் ...

என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்கு புதிதாக நிலம் கையகப்படுத்துவதற்கான நோட்டீசை, என்எல்சி இன்று வெளியிட்டுள்ளது. மீண்டும் விளைநிலங்களை கையகப்படுத்தினால், மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரித்துள்ளார். இதுகுறித்து விவசாயிகளின் கருத்துகளை கேட்டறிந்தோம்.. செய்தியாளர்கள் தேவகிருஷ்ணன், பார்த்திபன் வழங்கிய தகவல்கள் இவை...

அமித்ஷா பேச்சுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

"தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல"

"இந்தி திணிப்பு முயற்சிகள் வீழ்த்தப்படும்"

இந்தி மொழியை அனைவரும் ஏற்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சுக்கு இன்று கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாடு தலையாட்டி பொம்மை மாநிலம் அல்ல என கூறியுள்ளார்.

ஆன் சைட் மியூசியம்

ஆதிச்சநல்லூரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள ஆன் சைட் மியூசியம்...

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 22 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை இன்று தெரிவித்துள்ளது. இதனிடையே, விஜய் மக்கள் இயக்கத்தின் வழக்கறிஞர் அணி நிர்வாகிகளுடன், அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று ஆலோசனை மேற்கொண்டார். செய்தியாளர் பிரவீன் வழங்கிய தகவல்கள் இவை...


Next Story

மேலும் செய்திகள்