எதிர்பார்க்காத 5 உறுதிகள்.. பாஜக ஆட்டம் ஓவர்... திட்டங்கள் அல்ல... அஸ்திவாரம்
- கர்நாடகாவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் கிரகலட்சுமி திட்டம் தொடங்கியது.
- 2019-க்கு பிறகு தொடர் தோல்விகளை சந்தித்த காங்கிரஸ் கர்நாடகா தேர்தல் வெற்றியால் தெம்பாக இருக்கிறது. தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு, பாஜக அரசுக்கு எதிரான எதிர்ப்பலையை தாண்டி, காங்கிரசின் 5 உத்தரவாதங்கள் உதவியது.
- 2021-ல் தமிழகத்தில் திமுக வெளியிட்ட அறிவிப்புகளை போல்.... 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு
- இலவச பேருந்து சேவை, இலவச அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை என கவர்ச்சிகரமான அறிவிப்புகளால் கர்நாடகாவில் கை ஓங்கியது.
- 2024 தேர்தலை நோக்கி நகரும் காங்கிரஸ், வரவிருக்கும் 5 மாநில தேர்தல்களில் சத்தீஷ்கர், ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் பாஜகவை நேரடியாக சந்திக்க இருக்கிறது. அங்கும் பாஜகவை கார்னர் செய்ய கர்நாடகா மாநில உத்தரவாதங்களை அறிவித்து வருகிறது காங்கிரஸ்...
- இந்த சூழலில் கர்நாடகாவில் ஒவ்வொரு திட்டங்களையும் அத்தனை வேகமாக நிறைவேற்றி வருகிறது காங்கிரஸ்...
- இதில் முக்கியமாக குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் கிரகலட்சுமி திட்டத்தை 3 மாதங்களில் தொடங்கியுள்ளது கர்நாடகா காங்கிரஸ் அரசு... மல்லிகார்ஜுன கார்கே, மாநில முதல்வர் சித்தராமையா, ராகுல் காந்தி, துணை முதல்வர் சிவகுமார் கலந்து கொண்ட விழாவில் 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
- குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2 ஆயிரம் வழங்கும் திட்டம் குறித்து பேசிய ராகுல் காந்தி, தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்எதிர்பார்க்காத 5 உறுதிகள்.. பாஜக ஆட்டம் ஓவர்... திட்டங்கள் அல்ல... அஸ்திவாரம்றி வருகிறோம், இன்று ஒரு பட்டனை அழுத்தியதும் கோடிக்கணக்கான பெண்கள் கணக்கில் 2,000 ரூபாய் விழுந்துள்ளது என்றார்.
- டெல்லியில் உள்ள பாஜக அரசு 3-4 மில்லியனர்களுக்காக பணியாற்றுகிறது என விமர்சனம் செய்த ராகுல் காந்தி, 5 உத்தரவாதங்கள் வெறும் திட்டங்கள் அல்ல, ஆட்சி நிர்வாகத்திற்கான மாடல் எனவும், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு செய்யும் பணி இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
- கர்நாடகாவில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒரு கோடியே 8 ஆயிரம் பெண்கள் பயனாளர்களாக சேர்க்கப்பட்டுள்ள திட்டத்திற்கு அம்மாநில அரசு 17 ஆயிரத்து 500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.
- தமிழ்நாட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை அரசு விரைவில் தொடங்க உள்ளது.
- செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்க உள்ள திட்டத்தில் 1 கோடியே 62 லட்சம் பெண்கள் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது... திட்டத்திற்காக தமிழக அரசு 7 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Next Story