விரைவில் 2024 தேர்தல்.. எதிர்பார்ப்பை எகிறவிடும் தமிழக பட்ஜெட்
2024 மற்றும் 2025-ஆம் ஆண்டுக்கான இந்த நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். அவர் தாக்கல் செய்யவுள்ள முதல் நிதிநிலை அறிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட் என்பதால், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, காலை உணவுத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிய பயனாளிகள் சேர்ப்பு, திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கேஸ் மானியம் உள்ளிட்டவை பட்ஜெட்டில் இடம்பெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, வரும் 20-ஆம் தேதியன்று வேளாண் துறை பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. அதன் தொடர்ச்சியாக இந்த பட்ஜெட் மீதான எம்.எல்.ஏக்கள் விவாதம் 21-ஆம் தேதி நடைபெறும். 22-ஆம் தேதி எம்.எல்.ஏக்கள் விவாதத்திற்கு அமைச்சர்கள் பதிலளிப்பார்கள்.