கொண்டாட்டம் நிறைந்த பிலிப்பைன்ஸ் நாடு... ஊர் சுற்றி பார்க்க வேறலெவல் ஸ்பாட்...

x

Philippines-அ நாடுன்னு சொல்றதவிட தீவுன்னு சொல்றதுதான் கரெக்டா இருக்கும்.. ஏன்னா தென்கிழக்கு ஆசியாவுல இருக்க இந்த நாட்டுல… குட்டி குட்டியா மொத்தம் 7641 தீவுகள் இருக்கு… அந்த தீவுகள விட அதிகமாக தென்ன மரங்கள் இருக்கு. தென்னைகளோட சொர்கம்னே Philippines-ச சொல்லலாம்.

இளனி எப்படி உடம்புக்கு கூலிங்க தருதோ, அதே மாதிரி தான் இந்த நாடும், சுத்திபாக்க வர்றவங்கள கூலாக்கி விடுது.

Philippines-குள்ள நுழைஞ்சதுமே நாம கால வைச்ச இடம் இந்த நாட்டோட தலைநகரமான Manila. மணிலாவுல மல்லாக்கபடுத்துகிட்டு எந்த ஸ்பாட்டுக்கு போகலாம்ன்னு யோசிச்சுட்டு இருந்தப்பதான்… San Pablo அப்படினு ஒரு restaurant பத்தி ஊரே பேசிட்டு இருந்துச்சு…

ரெஸ்டாரண்டு சாப்புடுறதுக்கான இடம். அங்க சுத்தி பாக்க என்ன இருந்துட போகுதுனு ஒரு டவுட்டோடவே வலது கால எடுத்துவைச்சி அந்த அந்த ரெஸ்டாரண்டுக்குள்ள போனோன்.

உடம்பெல்லாம் ஜில்லுனு ஆச்சி... கால் வைச்ச இடமெல்லாம் தண்ணீ... அட இந்த ரெஸ்டாரண்டே தண்ணியில தாங்க இருக்கு.

சாப்பிட்டுகிட்டே குளிக்கலாம்... குளிச்சிகிட்டே சாப்பிடலாம்...

இந்த ரெஸ்டாரண்டுல செயற்கை நீர்வீழ்சி ஒன்னு ஓயாம தண்ணிய கொட்டிகிட்டே இருக்கு. கெண்டகால் அளவு தண்ணியிலேயே டேபிள போட்டு சாப்பாட்ட பரிமாறுராங்க.

இங்க நீங்க வந்தீங்கனா... குளிச்சிகிட்டும் சாப்பிடலாம்... சாப்பிட்டுகிடே குளிக்கலாம்...

அட… தண்ணிய பார்த்ததும் எனக்கு அடுத்ததா நியாபகம் வந்த இடம் Hinatuan Enchanted River…

ஆற்றுக்குள் த்ரில் அட்வென்ச்சர்...

பொதுவா கண்ணாடிதான் பளபளனு இருக்கும்னு சொல்லுவாங்க… ஆனா Hinatuan பகுதியில ஓடிகிட்டு இருக்குற ஒரு ஆறு தூசி, குப்பைன்னு எந்த அழுக்கும் இல்லாம கிர்ஸ்டல் கிளியரா இருக்கு.

தண்ணிக்குள்ள அப்படியே டைவ் அடிச்சு நீந்தி போனா ஒரு குட்டி குகையும் தெரியும்… அது கலர் மீன்களோட வசிப்பிடம். வித்தியாசமான கலர்ல, க்யூட்டா அதுங்க அங்க இங்கனு ஓடுற பாக்க ரெண்டு கண்ணு பத்தாது.

இந்த ஆறு மாதிரியே நம்ம ஊர்ல இருக்க எல்லா ஆற்றையும் எப்படியாவது மாத்த முயற்சி பண்ணனும்.

கதிகலங்க வைக்கும் வினோத கலாச்சாரம்...

பொதுவா நம்ம ஊருல யாராச்சும் இறந்துட்டா என்ன பண்ணுவாங்க… சுடுகாட்டுல பள்ளம் தோண்டி புதைப்பாங்க.. இல்லனா நெருப்பு வச்சு எரிப்பாங்க… ஆனா, Sagada நகரத்து மக்கள் சடலத்த சவப்பெட்டியோட சேர்த்து அந்தரத்துல கயிறுகட்டி தொங்கவிடுறாங்க…

பார்க்கவே அமானுஷ்யமா இருக்க இந்த வினோத நடமுறைக்கு பின்னால ஒரு நம்பிக்கை இருக்கு. அதாவது சடலத்தை சவபெட்டியில போட்டு இப்படி உயரமான இடங்கள்ள கட்டி தொங்கவிடும்போது… இறந்தவங்களோட ஆன்மா சீக்கிரம் சொர்கத்தை அடைஞ்சுடும்னு இந்த ஊர் மக்கள் நம்புறாங்க.

ஒன்னு இல்ல ரெண்டு இல்லங்க… கிட்டதட்ட 2000 வருஷமா இந்த ஊர்மக்கள் இந்த நம்பிக்கையை ஃபாலோ பண்ணிட்டு வராங்களாம்…

சாக்லேட் மலையின் சுவாரஸ்ய வரலாறு...

சின்ன குழந்தைகள்ள இருந்து பெரியவங்க வரைக்கு எல்லாருக்கும் பிடிச்ச இனிப்புன்னா அது சாக்கலேட்டாதான் இருக்க முடியும்… அந்த சாக்கலேட் பெயரையே நம்ம பிலிப்பைன்ஸ் மக்கள் மலைகளுக்கு வச்சிருக்காங்க…

பார்க்குறதுக்கு பிரமிட் வடிவத்துல இருக்கும் இந்த மலைகள்… மழைக்காலங்கள்ள புற்களால பசுமையாவும், வெயில் காலங்கள்ள காஞ்சு brown கலர்லையும் மாறிடுமாம். அதுனால இந்த மலைகளுக்கு chocolate hills-ன்னு பேர் வச்சிருக்காங்க…

மலைக்கு வித்தியாசமான பேரு வைச்சி இந்த ஊர்ல அதை விட வித்தியாசமா ஒரு வீட்ட கட்டியிருக்காங்க.

கப்பல் வடிவில் உருவான பிரம்மாண்ட வீடு...

கப்பல் மாலுமியின் கனவு மாளிகை...

கப்பல் ஷேப்புல இருக்க இந்த வீட்டோட ஓனர், ஷிப்புல வேல பார்த்த ஒரு கேப்டன். Gaudencio Dumapias-ங்குற கப்பல்ல அவரு வேலை பாத்திருக்காரு. தன்னோட தொழிலுக்கு அடையாளாமா இந்த வீட்ட கட்டியிருக்காரு.

வித்தியாசமான இந்த வீடு இப்போ டூரிஸ்டு ஸ்பாட்டா மாறிடுச்சி. இந்த ஊருக்கு வர்ர சுற்றுல்லாவாசிகள் பலரும் இந்த ship house-அ ஆச்சரியத்தோட பார்த்துட்டுவராங்க....

ஷிப் அவுஸ பாத்த பிரம்மிப்போட அப்படியே இந்த tree house-ஐயும் ஒரு எட்டு பாத்துட்டு வந்துடலாம் வாங்க...

கால்வலிக்க பிலிப்பைன்ஸ் நாட்ட சுத்திப்பார்த்த நாம... அடுத்து இங்க கொண்டாடுற வினோதமான திருவிழாக்கள்ள கலந்துட்டு எஞ்சாய் பண்ணலாம் வாங்க...

திருவிழான்னு சொன்னாங்களே ஊருக்குள்ள ஒரு பயலையும் ஆளக்கானோமேன்னு தேடி பார்த்தா... இங்க ஒரு கூட்டம் உடம்பு முழுக்க சேறு தடவி… காய்ந்த இலை தழையால அலங்காரம் பண்ணிட்டு… காட்டுவாசி மாதிரி church பக்கமா நடந்துபோனாங்க… அட என்னடா வேஷம் இதுன்னு அங்கிருந்த ஒருத்தரகிட்ட கேட்டு விசாரிச்சப்பதான்… Taong Putik Festival-க்கு பின்னாடி இருக்க பழைய பிளாஷ்பேக்க நம்மகிட்ட சொன்னாங்க…

அதாவது பைபில்ல வர்ர ஜான் அப்படிங்குற பழங்குடி இனத்தை சேர்ந்த ஒருத்தரு…jesus தன்னோட ஊருக்கு வரும்போது… சேரு இலைகள் கலந்த எளிமையான உடை அணிந்து jesus-அ வரவேற்றாராம்… அதுனாலதான் jesus-க்கு பிடித்த john-அ கொண்டாடுறவிதமா Taong Putik Festival அன்னைக்கு உடல்முழுக்க சேறு தடவி இப்படி ஒரு பாரம்பரியத்தை கொண்டாடுறாங்களாம்...

நம்ம ஊர்ல மாட்டு பொங்கல் கொண்டாடுற மாதிரி இந்த ஊர்லயும் ஒரு திருவிழா இருக்கு. அதோட பேரு carabao festival.

அதாவது carabao-னா எருமை மாடுனு அர்த்தமாம். மாடு மேய்க்குற விவசாயிங்களையும், மனுஷங்களுக்கு உதவியா இருக்க மாடுகளையும் பெருமைப்படுத்த தான் இப்படி ஒரு பிரம்மாண்ட திருவிழாவ கொண்டாடுறாங்க...

நாமதான் மனுஷங்கள எருமைமாடுனு திட்டி.. எருமை மாடு இனத்தையே அசிங்கப்படுத்துறோம்... ஆனா பாருங்க… கலர்கலர் மேக்கப்ல.. எருமைமாடுங்க நம்ம அத்தபொண்ணுங்களவிட அழகா இருக்காங்க

எருமை மாடுங்களோட அழகை ரசிச்ச அதே கண்ணோட. கடலோரம் காத்துவாங்கிட்டே Paraw Regatta festival-ல்ல கலந்துக்கலாம் வாங்க...

Paraw அப்படின்னா பாய்மரப்படகுனு அர்த்தம்.. கடலோரத்துல வாழுற மீனவர்கள்… வருஷத்துல ஒரு நாள் ஆயுதபூஜை கொண்டாடுற மாதிரி… தங்களோட பாய்மரப்படகுகள அலங்கரிச்சு கடல்ல ரேஸ் வச்சு இந்த திருவிழாவ கொண்டாடுறாங்க... வேடிக்கை மட்டுமில்லங்க... நம்மளையும் படகுல ஏத்தி ஜாலியா ஒரு ரவுண்டும் கூட்டிட்டு போவாங்களாம்...

படகு சவாரி போய்ட்டு வந்த கையோட அடுத்ததா நாம பொம்மைகள வச்சு கோலாகலமா கொண்டாடுற higantes festival-க்குதான் போகபோறோம்…

சுதந்திரத்து முன்னாடி philippines மக்கள் பட்ட கஷ்டங்களையும், வாழ்க்கை முறையையும்… மறுபடியும் நியாபகப்படுத்துறதுக்குதான் இந்த திருவிழா கொண்டாடப்படுது... அதுலயும் இந்த விழாவோட ஹைலைட்டான விஷயம் என்னன்னா... நம்மூர் தெருக்கூத்து மாதிரி பெரிய உருவ பொம்மைகள வச்சு பொதுமக்கள் மத்தியில விடிய விடிய நாடகம் நடத்துவாங்களாம்... சரி வாங்க நாமளும் கொஞ்சம் களத்துல இறங்கி ஆட்டத்த போட்டுட்டு வருவோம்...

அடடா… ரொம்ப நாளைக்கு அப்புறம் நம்ம ஊர் மாரியம்மன் கோவில் திருவிழால ஆட்டாம்போட்ட மாதிரி பிலிப்பைன்ஸ் நாட்டு விழாவ செம்ம ஜாலியா செலிபிரேட் பண்ணியாச்சு…

அடுத்தென்ன பிலிப்பைன்ஸ் நாட்டு வெரைட்டியான உணவுகள வாயிக்கு ருசியா வாங்கி சாப்பிடலாம் வாங்க..

பெரிய பசிய விட அப்பப்போ எடுக்குற குட்டி பசிய சமாளிக்க மொறு மொறு lumpia ரோல்தான் பெஸ்ட் சாயிஸ்…

ஜிம் டயட்டுக்கு பாய் சொல்லிட்டு இறால் போட்டு சமைக்குற pancit நூடுல்ஸ் டிரை பண்ணி பாருங்க… போதும்ன்னு சொல்லாம சாப்டுகிட்டே இருப்பீங்க…


Next Story

மேலும் செய்திகள்