இரவு 9 மணி தலைப்புச் செய்திகள் (30-01-2024) | 9PM Headlines | Thanthi TV | Today Headlines
"விரைவில் விண்வெளி மையம்"
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் இன்று தொடக்கம்...
இந்தியாவிற்கென விரைவில் விண்வெளி மையம் அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை என குடியரசு தலைவர் பேச்சு...
மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான ராமர் கோயில் கட்டப்பட்டிருப்பதாகவும் பெருமிதம்...
"ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு தயார்"
நாடாளுமன்ற கூட்டத்தொடர், மகளிர் சக்திக்கான அடையாளமாக திகழ்வதாக, பிரதமர் மோடி இன்று பெருமிதம்...
எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான விவாதத்திற்கு, மத்திய அரசு தயாராக இருப்பதாகவும் பேட்டி...
"தமிழ்நாட்டில் சி.ஏ.ஏ-க்கு அனுமதி இல்லை"
தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை, நடைமுறைப்படுத்த விடமாட்டோம்...
முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திட்டவட்டம்...
சி.ஏ.ஏ-வால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை அதிமுக அனுமதிக்காது என எடப்பாடி பழனிசாமி அதிரடி...
பிப்.12-ல் சட்டப்பேரவை கூட்டத்தொடர்?
நடப்பு ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் பிப்ரவரி 12ல் தொடங்க வாய்ப்பு...
19-ஆம் தேதி பொது பட்ஜெட்டும், 20-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும் எனத் தகவல்...
நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தல்
நாடாளுமன்ற தேர்தலில், திமுக தலைவர் யாரை கை காட்டுகிறாரோ அவரே பிரதமராக வர வேண்டும்...
கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அறிவுறுத்தல்...
இந்துக்கள் வழிபட அனுமதி - நீதிமன்றம் அதிரடி
ஞானவாபி மசூதியில் தெற்கு பகுதியில் உள்ள சீலிடப்பட்ட நிலவறையை வழிபட இந்துக்களுக்கு வாரணாசி நீதிமன்றம் இன்று அனுமதி...
7 நாட்களுக்குள் பூஜையை தொடங்கலாம் என்றும் உத்தரவு...
காங்., உடன் முறிவு ஏன்? - மம்தா விளக்கம்
மேற்கு வங்கத்தில் ஒரு எம்.எல்.ஏ., கூட இல்லாத காங்கிரசுக்கு 2 எம்.பி. சீட் தருவதாக கூறியதை காங்கிரஸ் ஏற்கவில்லை...
பாஜகவுடனான தங்கள் போராட்டம் தொடரும் என்றும் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று விளக்கம்...
97 பதக்கம் - தமிழ்நாடு 2வது இடம்
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவு...
38 தங்கம் உள்பட 97 பதக்கங்களை வென்று முதன்முறையாக 2வது இடம் பிடித்து தமிழ்நாடு அணி சாதனை...