இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (28-10-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

x

2026 சட்டமன்ற தேர்தல் - தி.மு.க. ஆலோசனை

2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை தொடங்கியது தி.மு.க...

சட்டமன்ற தொகுதி பார்வையாளர்கள் உடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை...

ரஜினி அரசியலுக்கு வராததால் விஜய்யை இழுத்ததோ பா.ஜ.க.?

நடிகர் ரஜினி அரசியலுக்கு வராத காரணத்தால், பாஜக விஜய்யை இறக்கி இருப்பார்களோ என சந்தேகம் எழுவதாக சபாநாயகர் அப்பாவு பேட்டி....

தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பாஜக தலைவருடன் நெருக்கம் காட்டி வருவதாகவும் தகவல்....

விஜய் கூட்டணி கொள்கை - காங். எம்.பி. வரவேற்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி கொள்கைக்கு காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தா​கூர் வரவேற்பு...

ஜாதி வாரி கணக்கெடுப்பு, கூட்டணி ஆட்சி இரண்டும் தமக்கு பிடித்திருந்ததாக எக்ஸ் தளத்தில் பதிவு....

"த.வெ.க.வால் அ.தி.மு.க.வுக்கு பாதிப்பில்லை"

தமிழக வெற்றிக் கழகத்தால் அதிமுகவுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேட்டி...

திமுகவிற்கு எதிர்ப்பு அலையாகத்தான் தவெக மாநாடு அமைந்ததாகவும் கருத்து.....

த.வெ.க. தலைவர் விஜய்க்கு பவன் கல்யாண் வாழ்த்து

த.வெ.க. தலைவர் விஜய்க்கு ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வாழ்த்து...

துறவிகள், சித்தர்களின் பூமியான தமிழகத்தில் கட்சி தொடங்கியுள்ள விஜய் என குறிப்பிட்டு நெகிழ்ச்சி...

கவுரவ விரிவுரையாளர் நியமனம்- அன்புமணி கண்டனம்

நிரந்தர உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கு பதிலாக, இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாத கவுரவ விரிவிரையாளர் நியமனத்தை மேற்கொள்வது, சமூகநீதிக்கு எதிரானது...

பா.ம.க. தலைவர் அன்புமணி கண்டனம்...

குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவு வெளியீடு...

20 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்ற நிலையில் வெளியானது...


Next Story

மேலும் செய்திகள்