காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-07-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines

x

பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தில் நீதி நிச்சயம் நிலைநாட்டப்படும்..

குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவோம் எனவும் ஆம்ஸ்ட்ராங் மனைவியிடம் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி..

ஆம்ஸ்ட்ராங் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார், முதல்வர் ஸ்டாலின்..

எதிர்க்கட்சி தலைவர் ஈ.பி.எஸ், முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ், பாமக தலைவர் அன்புமணி உள்ளிட்ட தலைவர்களும் நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்..

தமிழகத்தில் 5 புதிய மருத்துவக் கல்லூரிகள் உட்பட, நாடு முழுவதும் 113 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி..

இந்த ஆண்டே மாணவர்களை சேர்க்கும் வகையில், உத்தர பிரதேசத்தில் 22, மகாராஷ்டிராவில் 14, ராஜஸ்தானில் 12 கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது..

ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு..

ஆஸ்திரிய நாட்டு அதிபர் மற்றும் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்..

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது..

திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி..

276 வாக்குச்சாவடிகளும் தயார் நிலை..


Next Story

மேலும் செய்திகள்