Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21.03.2025) | 6 AM Headlines | Thanthi TV
பேரவையில் தான் பேச வந்ததை தவறாக புரிந்து கொண்டு பாதியிலேயே நிறுத்தி விட்டார்கள் என எம்.எல்.ஏ. வேல்முருகன் விளக்கம்..
தனக்கு தகராறு செய்யும் நோக்கம் இல்லை என்றும் பேட்டி..
பாஜகவின் ஆள் பிடிக்கும் ஃபார்முலா தமிழ்நாட்டில் எடுபடாது என அமைச்சர் ரகுபதி காட்டம்..
செந்தில்பாலாஜி வழக்கில் அமலாக்கத்துறை மீண்டும் நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் விமர்சனம்..
தினமும் கொலை தொடர்பான அறிக்கையை சமர்பிப்பது தான் திமுக ஆட்சியின் சாதனை என ஈபிஎஸ் விமர்சனம்..
காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலையில் உள்ளதாகவும் குற்றச்சாட்டு..
சட்டப்பேரவையில் சட்டம் ஒழுங்கு குறித்த விவாதத்தின்போது அதிமுக வெளிநடப்பு..
தைரியம் இருந்தால் நான் கூறுவதை கேட்டுவிட்டு வெளியேறுங்கள்..
டி.வியை பார்த்து தெரிந்து கொண்டதாக கூற தயாராக இல்லை எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் பதில்..
Next Story