அரசு டாக்டர்கள் நியமனம் - சென்னை ஐகோர்ட் அதிரடி
அரசு மருத்துவர்கள் நியமனத்திற்கு எதிரான வழக்கில், மருத்துவர்கள் நியமனம் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 5-ல் நடைபெற்ற உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வின் மூலம் மருத்துவர்கள் நியமனத்திற்கான இறுதிப்பட்டியல் தயார் செய்யப்பட்டது. இதில், மருத்துவ கவுன்சிலில் நிரந்தர பதிவு இல்லை என கூறி, பட்டியலில் இருந்து 400 மருத்துவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதனை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், விசாரணையின் போது நிரந்தர பதிவு சான்றிதழ் பெற முடியதாதற்கு பல்கலைக்கழகம் தான் காரணம் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை பதிவு செய்த நீதிபதி, பணி நியமன உத்தரவுகள் வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தார்.
Next Story