மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் பேரவைத் தேர்தல் - தேர்தல் ஆணையம் சொன்ன தகவல்

x

மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நேற்று அமைதியாக நடந்து முடிந்தது.230 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 5 மணிக்கு முடிவு பெற்றது.

இந்த தேர்தலில், 74 பள்ளி 98 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேபோல், சத்தீஸ்கரில் இரண்டாவது மற்றும் கடைசிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. 70 தொகுதிகளில் காலை 8 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. நக்சல் ஆதிக்கம் மிகுந்த ஒரு சில பகுதிகளில் மட்டும் மதியம் மூன்று மணிக்கே வாக்கு பதிவு நிறைவடைந்தது. ஒட்டு மொத்தமாக, 70 புள்ளி 59 சதவீத வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்