காரில் வந்தவர் செய்த செயல்.. அதிகாரிகளின் தரமான சம்பவம் | Thanthitv

x

கோவை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 100 வார்டு உள்ளது. இந்த வார்டுகளில் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை வீடு வீடாக சென்று சேகரித்து வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டி வருகின்றனர். இந்நிலையில் அன்பு என்பவர் நஞ்சுண்டாபுரம் சாலை பொது இடத்தில் காரில் வந்து குப்பை கொட்டியதை சுகாதார ஆய்வாளர் ஜெகநாதன் நேரில் பார்த்து, அந்த காரை மடக்கிப் பிடித்து குப்பை கொட்டியதற்காக 2000 ரூபாய் அபராதம் விதித்தார். மேலும் குப்பைகளை சாலைகளில் போடக்கூடாது என அறிவுரை கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்