ஊழியர்களுக்கு ஊதியத்தை நிறுத்திய App - 50 பேர் மட்டுமே பணிபுரிவதாக தகவல்
இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட KOO செயலி நிறுவனம், தனது பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுக்கும், எக்ஸ் தளத்திற்கும் இடையே ஏற்பட்ட மோதலால், ட்விட்டருக்கு போட்டியாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட KOO செயலி, கடந்த 2019-ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில் நிதி நெருக்கடி காரணமாக KOO செயலி பணியாளர்களுக்கு ஊதியம் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் 80 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 50 பேர் மட்டுமே KOO நிறுவனத்தில் பணிபுரிவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story