யமுனை ஆற்றில் இருந்து கையால் நீரை எடுத்து பருகிய ஹரியானா முதல்வர்
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் டெல்லிக்கு குடிநீர் வழங்கும் யமுனை ஆற்றின் நீரை ஹரியானா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி(Nayab Singh Saini), பருகியது கவனம் பெற்றுள்ளது. அரியானா அரசு அளவுக்கு அதிகமான அமோனியா நச்சு இரசாயனத்தை கலப்பதாக டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியிருந்த நிலையில், இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையரிடம் ஹரியானா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி புகார் அளித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக அவர் யமுனை ஆற்றில் இருந்து கையால் நீரை எடுத்து பருகியது குறிப்பிடத்தக்கது.
Next Story