நாட்டின் ஜீவ நதியில் விஷம் கலப்பா? - மொத்தமாக மாறிய அதிர்ச்சி காட்சி
நாட்டின் ஜீவ நதியில் விஷம் கலப்பா? - மொத்தமாக மாறிய அதிர்ச்சி காட்சி... பிரதமர் மோடியே நேரடியாக சொன்ன சேதி
யமுனை ஆற்றில் அரியானா விஷத்தை கலக்கிறதா...? டெல்லி தேர்தல் களத்தை புரட்டிப் போட்டிருக்கும் குற்றச்சாட்டு விவகாரத்தில் நடப்பது என்ன...? என்பதை விவரிக்கிறது இந்த தொகுப்பு...
டெல்லியில் நவம்பரில் நுரை பொங்க யமுனை பெருக்கெடுத்த காட்சிகள் காண்போரை அதிர்ச்சியடையச் செய்தது.
அப்போது முதலே டெல்லி தேர்தல் பிரசாரத்தில் மையமாக இருக்கிறது யமுனை நதி.
டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா, ஆம் ஆத்மிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக யமுனையில் குளித்து உடலை புண்ணாக்கிக் கொண்டார். அதன் தொடர்ச்சியாகவே யமுனை மாசு டெல்லி அரசியலை உலுக்கி வருகிறது.
யமுனை நதியை சுத்தம் செய்வதாக ஆட்சிக்கு வந்த கெஜ்ரிவால் அதை செய்யவில்லை என்பதுதான் பாஜக குற்றச்சாட்டு.
புது டெல்லியில் கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பர்வேஷ் வர்மா, கெஜ்ரிவால் கட்-அவுட்டை யமுனைக்குள் மூழ்கடித்தார்.
இப்படி யமுனை மாசு விவகாரத்தில் ஆம் ஆத்மியை பாஜக டார்கெட் செய்ய, அரியானா பாஜக அரசாங்கம் யமுனையில் விஷம் கலந்துவிட்டது,
டெல்லி குடிநீர் வாரியம் விழிப்போடு செயல்பட்டதால் நீர் டெல்லிக்குள் வராமல் தடுக்கப்பட்டது என கெஜ்ரிவால் பிரசாரத்தில் சொன்னது புயலை கிளப்பியது.
டெல்லி மக்கள் உயிரிழந்தால் ஆம் ஆத்மி மீது பழி சுமத்த பாஜக இப்படி செய்ததாக குற்றம் சாட்டினார் கெஜ்ரிவால்..
பிரதமர் மோடி, அமித்ஷா என பாஜகவில் பலரும் எதிர்ப்பு தெரிவிக்க, விவகாரம் நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையம் சென்றது.
இந்த சூழலில் டெல்லி பல்லா (PALLA) கிராமத்தில் யமுனை நீரை அருந்தினார் அரியானா முதல்வர் நயாப் சிங் சைனி.
டெல்லியில் பிரசாரம் செய்த பிரதமர் மோடி... அரியானா மீது மோசமான குற்றச்சாட்டுகளை கெஜ்ரிவால் வைத்திருப்பதாகவும், தானும் டெல்லியில் யமுனை நீரையே குடிப்பதாக குறிப்பிட்டார்.
யமுனை நீரை எடுத்துக்கொண்டு பாஜக அலுவலகம் நோக்கிச் சென்றது ஆம் ஆத்மி.
தேர்தல் ஆணையம் சம்மன் வழங்க, டெல்லி யமுனை நதி நீரில் அமோனியம் அதிகம் இருப்பதாக பதில் கொடுத்தார் கெஜ்ரிவால்.
இனப்படுகொலை என்ற குற்றச்சாட்டுக்கு இது பதில் இல்லையே என்ற தேர்தல் ஆணையம், அரியானா விஷம் கலந்த ஆதாரத்தை கொடுக்குமாறு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.
தேர்தல் ஆணையம் அரசியல் செய்கிறது என குற்றம் சாட்டிய கெஜ்ரிவால், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு 3 பாட்டீல் யமுனை நீரை அனுப்புகிறேன், அவர் அதை குடித்துவிட்டால், எங்கள் தவறை ஒப்புக் கொள்கிறோம் என கூறியிருக்கிறார்.
கெஜ்ரிவால் குற்றச்சாட்டால் ஒட்டு மொத்தமாக டெல்லி பிரசாரமும் யமுனை நதி பிரச்சினையில் நகர்கிறது.