யமுனை ஆற்றில் என்ன நடக்கிறது? - அதிர்ச்சி தகவல்
டெல்லிக்கு வரும் யமுனை நீரில் அம்மோனியா நச்சை அரியானா பாஜக அரசு கலந்து விடுவதாக ஆம் ஆத்மி கட்சி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக, டெல்லி முதல்வர் அதிஷி மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர், தேர்தல் தலைமை ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதனிடையே வீடியோ மூலம் பேசியுள்ள அதிஷி, தண்ணீரில் எந்த பிரச்சினையும் இல்லை என்று, துணை நிலை ஆளுநரின் அழுத்தத்தால் டெல்லி குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். டெல்லி குடிநீர் வாரியம் எழுதியுள்ள கடிதத்தில், ஒரு பி.பி.எம். அம்மோனியாவை சுத்திகரிக்கும் நிலையில் இருந்து, 2.5 பி.பி.எம். அளவுக்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அதிஷி, ஆனால், 6.5 பி.பி.எம். என்ற அளவுக்கு 6 மடங்கு அம்மோனியா அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Next Story