உடல் நலக் குறைவால் உயிரிழந்த காதல் மனைவி
இனிமையான காதல் கதைக்கு கசப்பான முடிவெழுதி விட்டது விதி...
தெலங்கானா மாநிலம்...கம்மம் மாவட்டம்...எட்லா பஞ்சாரா கிராமத்தைச் சேர்ந்த அசோக் கண்ணாவுக்கும் பத்மஸ்ரீக்கும் 2006ல் இனிதே நடந்தேறியது காதல் திருமணம்...
காதலின் அடையாளமாக அழகான ஒரு பெண் குழந்தை...
யார் கண் பட்டதோ தெரியவில்லை...உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் முடங்கினார் பத்மஸ்ரீ...
சிகிச்சை பலனின்றி பரிதாபமாய் பறிபோனது பத்மஸ்ரீயின் உயிர்...
கணவர் அசோக் கண்ணாவால் மனைவியின் இழப்பதைத் தாங்கவே முடியவில்லை...
இறுதி வரை கூட வருவேன் என கரம் பிடித்து..விதியின் விளையாட்டால் பாதியிலேயே கைவிட்ட மனைவியின் கையையும்...தன்னுடைய கை மற்றும் மகளின் கையையும் ஒன்றுசேர்த்து அழகாக வார்த்து சிலை போல் உருவாக்கி காதல் சின்னமாக்கி நெகிழ வைத்துள்ளார் அசோக் கண்ணா...
அசோக் கண்ணாவின் காதல் அவர் கிராமத்தையே கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது...