அந்தரத்தில் துடிதுடித்த உயிர்கள்.. நெஞ்சை பிளந்த பலி எண்ணிக்கை - தெரிந்தே நடந்த விபத்து
அந்தரத்தில் துடிதுடித்த உயிர்கள்.. நெஞ்சை பிளந்த பலி எண்ணிக்கை - சிதறிய பெட்டிகள்.. தெரிந்தே நடந்த விபத்து
#westbengal #trainaccident #thanthitv #train
மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. நியூ ஜல்பைபுரி பகுதியில் இருந்து சியால்டா பகுதியை நோக்கி கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் சென்று கொண்டிருந்தது. ரங்காபானி ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருந்போது, கஞ்சன்ஜங்கா ரயில் மீது பின்னால் வந்த சரக்கு ரயில், பயங்கர சத்தத்துடன் மோதியது. இதில் விரைவு ரயிலின் கடைசி மூன்று பெட்டிகள் தடம் புரண்டன. இந்த கோர உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் வடக்கு பெங்கால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிக்னலை கவனிக்காமல் சரக்கு ரயில் இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.