கேரளாவிற்காக ஒன்றிணைந்த கைகள்..புதையுண்ட மண்ணில் பூக்கும் நம்பிக்கை - உடனே உதவிய விக்ரம்..

x

கேரளாவிற்காக ஒன்றிணைந்த கைகள்

புதையுண்ட மண்ணில் பூக்கும் நம்பிக்கை

உடனே உதவிய விக்ரம்..களத்தில் நடிகை

உருகுலைந்து போயுள்ள வயநாட்டில் சாதி மதம் கடந்து நடந்து வரும் மீட்பு பணிகள் குறித்து பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...

கேரள மாநிலம் வயநாடு அடுத்த மேப்பாடி நிலச்சரிவால் நிலை குலைந்துள்ளது...

நிலச்சரிவில் இருந்து நூற்றுக்கணக்கானோர் மீட்கப்பட்டு வரும் வேளையில், அவர்களை தங்க வைக்க பல இடங்கள் நிவாரண முகாம்களாக உருவெடுத்துள்ளன.

அதில் மேப்பாடி முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலும் ஒன்று..

இஸ்லாமிய வழிபாட்டு தலம் தற்காலிக முகாமாக மாறியுள்ளது, மீட்பு பணியில் ஈடுபட்டவர்களும் பசியாற பிஸ்கெட் மற்றும் பிரெட்டுகளை அடுக்கி வைத்துள்ளனர்.

மேலும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்காலிக தங்குமிடம் அமைத்து உணவு, தேநீர் கொடுத்து தேற்றி வருகின்றனர்...

இதுகுறித்து பள்ளிவாசல் நிர்வாகியான முபாரக்கிடம் பேசுகையில், பள்ளிவாசலில் உதவிகள் குவிந்த வண்ணம் உள்ளதாக தெரிவிக்கின்றார்..

சாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் உதவிக்கரம் நீட்டியுள்ளதாக நெகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்..

மேலும் உயிரிழந்தவர்களின் உடல்களும் கண்டறியப்பட்டு அதற்கான உதவிகளையும் செய்து வருகிறோம்.

இதே போல், 65 வயதுடைய ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ஒருவரும் துணிச்சலுடன் மீட்பு பணியில் ஈடுபட்டதை காண முடிந்தது...

போலீசாருடன் போக்குவரத்து சரி செய்தல் மீட்புப் பணிக்கு வரக்கூடியவர்களுக்கு உதவுதல் என தாமாக முன்வந்து அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்...

பலி எண்ணிக்கை கூடும் என அச்சம் தெரிவித்துள்ள, அதே வேளையில், மீட்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

தன்னார்வலர்களை போலவே, பிரபலங்களும் நட்சத்திரங்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை செய்து வருகின்றனர்..

நடிகர் விக்ரம், சூர்யா, கார்த்தி, நயந்தாரா உள்ளிட்ட நடிகர், நடிகைகள் பலர் நிதியுதவி வழங்கிவரும் நிலையில்,

நடிகை நிகிலா விமல் களத்தில் இறங்கி உதவிகள் வழங்கினார்.

இப்படி உதவிக்கரங்கள் நீண்டு கொண்டிருக்க, விரைவில் கேரளா மீண்டு வர வேண்டும் என பிரார்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்