வயநாட்டில் மண்ணோடு புதைந்த குடும்பம்.. கைபிடித்த காதலனையும் விட்டு வைக்காத எமன்.. உயிர் பிரியும் முன் காதலன் சொன்ன வார்த்தை... கடைசி துளி நம்பிக்கையும் போச்சு...நரக வாழ்க்கை.. எந்த பெண்ணுக்கும் வரக்கூடாத நிலை

x

பல குடும்பங்களை மண்ணோடு மண்ணாக்கிய வயநாடு நிலச்சரிவு

பல குடும்பங்களை மண்ணோடு மண்ணாக்கி பெரும் துயரத்தை ஏற்படுத்தியது வயநாடு நிலச்சரிவு.

குடும்பத்தின் உயிருக்கு உயிராக இருந்த பல உறவுகளை ஈவு இரக்கம் இல்லாமல் அடித்த சென்றதன் காரணமாகத் தப்பிப் பிழைத்த சிலரும் சித்தப் பிரமை போல் நடந்து சென்ற காட்சிகளும் கண்களை விட்டு இன்னும் அகலவில்லை..

ஒட்டுமொத்த குடும்பத்தையும் இழந்து தனி மரமாக நின்ற இளம் பெண் முண்டக்கையை சேர்ந்த இளம் பெண் ஸ்ருதி தனியார் மருத்துவமனையில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் தாய், தந்தை, சகோதரன் என ஒட்டு மொத்த குடும்பத்தையும் இழந்து நின்ற ஸ்ருதியின் வேதனை கேரளா மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் அவரின் திருமணத்திற்காகச் சேர்த்து வைத்திருந்த 15 சவரன் நகை, நான்கு லட்ச ரூபாய் பணம் உள்ளிட்ட அனைத்துமே மண்ணோடு மண்ணாக அடித்துச் செல்லப்பட்டன...

ஆறுதலாக இருந்த பள்ளி தோழன்சொல்லொணா துயரத்தில் அனைத்தையும் இழந்து நின்ற ஸ்ருதிக்கு பக்க பலமாக இருந்து தோள் கொடுத்தவர் ஜென்சன். பள்ளியில் தொடங்கிய நட்பு காதலாக மாற இரு குடும்பத்தினரும் கலந்து பேசி நிலச்சரிவு ஏற்படுவதற்கு இரு வாரங்களுக்கு முன்தான் இரு குடும்பத்தினர் சம்மதத்துடன் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடத்தப்பட்டு இருக்கிறது.

தனது உறவினர் வீட்டில் தங்கி இருந்ததால் தான் நிலச்சரிவிலிருந்து தப்பி இருக்கிறார் ஸ்ருதி.

இந்த நிலையில் தான் ஸ்ருதிக்கு மீண்டும் ஒரு துயரம் நடந்து இருக்கிறது.. ஜென்சன், ஸ்ருதி உள்ளிட்டோர் பயணம் செய்த கார் வயநாட்டை அடுத்துள்ள கல்பெட்டா பகுதியில் தனியார் பேருந்து மீது நேருக்கு நேர் மோதியதில் ஜென்சன் உட்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்..

இளம் பெண்ணின் நம்பிக்கையை தகர்த்த விபத்து ஜென்சன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட பலரும் அவருக்காக பிரார்த்தனை நடத்திய நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவர்..

பலரையும் காவு வாங்கிய பேரழிவிலிருந்து தப்பித்து தீராத மனவலியுடன் இருந்த ஸ்ருதிக்கு ஆறுதலாகவும் நம்பிக்கையாகவும் இருந்த ஜென்சனையும் இழந்திருப்பது இனி யாருக்கும் எங்கும் நேரக்கூடாத துயரம்..

இது பற்றி அறிந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், ஸ்ருதிக்கு பக்க பலமாகக் கேரளா மக்கள் இருக்கிறார். பெருந்துயரத்தில் இருந்து ஸ்ருதி மீண்டு வரவேண்டும் தெரிவித்து இருக்கிறார். இது மட்டுமல்லாது மலையாள நடிகர்கள் மம்மூட்டி மற்றும் பஹத் பாசில் உள்ளிட்டோரும் ஸ்ருதிக்கு தங்கள் சமூக வலைத்தள பக்கம் மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளனர்..

நிலச்சரிவுக்குப் பின் ஜென்சன், என்ன ஆனாலும் நான் அவளைக் கைவிட மாட்டேன், ஆனால் எனக்கு எதாவது நடந்தால் என்ன செய்வது என்பது தான் எனக்குப் பயமாக இருக்கிறது என்று அவர் கூறியது உண்மையாகி இருப்பது கேரள மக்களிடையே மேலும் சோகத்தை அதிகமாக்கி இருக்கிறது...


Next Story

மேலும் செய்திகள்